Image default
பெருமனிதர்கள்

மாமனிதர் பொன் சத்தியநாதன்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்துவந்த தமிழ்ப்பற்றாளர் வைத்திய கலாநிதி பொன். சத்தியநாதன் வெள்ளிக்கிழமை ( 15 – 09 – 2017 ) அன்று சாவடைந்தார்.

இவர் தமிழரின் வாழ்வுக்காக தமிழ்மொழி பாதுகாக்கப்படவேண்டும் அதன் மூலம் சாதி சமயம் கடந்த தமிழர் நெறியை அனைவரும் போற்றி பாதுகாக்கவேண்டும் என தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணித்து பணிசெய்து வந்த ஒரு பெருமனிதனாக வாழ்ந்து மறைந்துள்ளார்.

தமிழரின் தொன்மைமிக்க வள்ளுவரின் குறள்களை நெறியாகக் கொண்டு வள்ளுவமே தமிழரின் மதமாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டு தான் செல்லும் வீடுகளுக்கு வள்ளுவரின் சிலைகளை பெரும் நிதிச்செலவில் செய்வித்து கொண்டுசென்று கொடுத்துவந்தார்.

தமிழ்மொழியில் பேசும்போது அதனை நேரடியாகவே தட்டெழுத்தாக மாற்றக்கூடிய மென்பொருள் ஒன்றை வடிவமைப்பதில் தனது இறுதிக்காலத்தில் கடினமாக உழைத்தார்.

வெளித்தெரியாமலே பல்வேறு பணிகளை ஆற்றிய இவர், அவுஸ்திரேலியாவில் தொடக்கப்பட்ட முக்கியமான தமிழர் அமைப்புகளினதும் தமிழர் ஊடகங்களினதும் அடிப்படையான முதுகெலும்பாக கொடைவள்ளலாக வாழ்ந்தார்.

அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி தமிழீழத்திலும் தமிழகத்திலும் மலேசியாவிலும் பெரும் நிதியை செலவழித்து தமிழரின் எதிர்கால வளர்ச்சியை கருதி பல திட்டங்களை முன்னெடுத்தார்.

இவரது தமிழார்வத்தையும் அதன் வளர்ச்சிக்கான அவரது பணிகளையும் அறிந்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களினதும் அவரது மகன் சார்ல்ஸ் அன்ரனி அவர்களினதும் பெருமதிப்பை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தேசியபற்றாளர் சிங்கராசா

tamil

மாமனிதர் எலிஜேசர்

tamil

மாமனிதர் ஜெயகுமார்

tamil

Leave a Comment